தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மற்றும் அதிமுக நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆரின் 108 வது பிறந்த தினம் இன்று. இதனை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் இன்று சென்னை கிண்டி தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள எம்ஜிஆர் திருவுருவ சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அதன் பிறகு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் மறைந்த தலைவர் எம்ஜிஆருக்கு வாழ்த்து தெரிவித்து புகழாரம் சூட்டும் நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயும் எம்ஜிஆரை புகழ்ந்து ஒரு எக்ஸ் பதிவை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், அளவற்ற வறுமையைத் தாண்டினார். கூத்தாடி என்ற கூற்றை சுக்கு நூறாக உடைத்து தமிழக அரசியல் வரலாற்றின் மையம் ஆனவர். அசைக்க முடியாத வெற்றியாளர் ஆனார். அவரை தமிழக அரசியலில் அதிசயமானார். மேலும் இறந்தும் வாழும் புரட்சித் தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்