பள்ளி செல்லாத குழந்தைகளை ஆசிரியர்கள் கணக்கெடுக்க வேண்டும் என்று தொடக்கக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 6 முதல் 18 வயதுடைய பள்ளி செல்லாமல் இருக்கும் குழந்தைகளை (மாற்றுத்திறன் மற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகள் உட்பட) கண்டறிய வருடந்தோறும் சிறப்பு கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இதில் கண்டறியப்படும் குழந்தைகள் பக்கத்தில் இருக்கும் பள்ளியில் அவரவர் வயதுக்கேற்ற வகுப்பில் சேர்க்கப்படுவர்.

அதன்படி,  வரும் கல்வியாண்டுக்கான (2023-24) பள்ளி செல்லாத குழந்தைகளை கண்டறிவதற்கான கணக்கெடுப்புப் பணிகளை ஏப்ரல் 2-வது வாரம் முதல் மேற்கொள்ள வேண்டும். அனைத்து வட்டாரங்களிலும் எந்தொரு குடியிருப்பும் விடுபடாமல் வீடுவாரியாக கணக்கெடுக்க வேண்டும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.