விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்த சம்பவத்தில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பம் வம்பாமேட்டைச் சேர்ந்த சங்கர் (55), சுரேஷ் (60), தரணி வேல் (50) உள்ளிட்டோர் கள்ளச்சாராயம் குடித்துள்ளனர். தொடர்ந்து அவர்கள் மயங்கிய நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சிகிச்சைப் பலனின்றி சங்கர் (55), சுரேஷ் (60), தரணி வேல் (50) ஆகியோர் உயிரிழந்தனர். மேலும், கள்ளச்சாராயம் குடித்த 10க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். இந்நிலையில், சிகிச்சையிலிருந்த ராஜமூர்த்தி என்பவரும் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து எதிர்க்கட்சியினர் தமிழக அரசை விமர்சனம் செய்து வரும் நிலையில் தமிழகம் போதை மாநிலமாக மாறியுள்ளது, இது தான் திமுக அரசின் சாதனை’ என ADMK எம்பி CVசண்முகம் விமர்சித்துள்ளார். கள்ளச்சாராய வழக்கில் 3 முறை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட திண்டிவனம் திமுக பெண் கவுன்சிலரின் கணவர், வீட்டிலேயே சாராயம் தயாரித்து பாக்கெட் போட்டு விற்பனை செய்துவருவதாக கூறிய அவர், அண்மையில் கைது செய்யப்பட்ட அவர் யார் தலையீட்டால் விடுவிக்கப்பட்டார் எனவும் கேள்விஎழுப்பியுள்ளார்.