தமிழகத்தில் முக்கிய பண்டிகை நாட்கள் மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அவ்வகையில் தமிழகத்தில் ஜனவரி மாதத்தில் மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும். அதாவது ஜனவரி 16ஆம் தேதி திருவள்ளுவர் தினம்,ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினம் மற்றும் ஜனவரி 30ஆம் தேதி வள்ளலார் நினைவு தினம் ஆகிய நாட்கள் மது விற்பனை இல்லா தினங்களாக அனுசரிக்கப்படுகின்றன. இதற்காக மேற்கண்ட நாட்களில் அனைத்து மது கடை, பார்கள் அனைத்தும் பூட்டி சீல் வைக்க வேண்டும். அதன்படி அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தற்போது இந்த உத்தரவை பிறப்பித்து வருகின்றனர்.