தமிழகத்தில் மொத்தம் 2553 மருத்துவ பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை பார்வையிட்ட பின்னர் பேசிய அமைச்சர், நாட்டிலேயே முதல்முறையாக 700 படுக்கைகள் கொண்ட அரசு மருத்துவமனை உதகையில் அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழகத்தில் மருந்தாளுனர்கள், சுகாதார ஆய்வாளர்களை நியமிக்கும் பணியில் நடைபெற்று வருவதாகவும் விரைவில் 2553 மருத்துவ பணியிடங்கள் நிரப்பப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.