தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு நடைபெற இருக்கிறது. மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பொதுத்தேர்வுகள் நடைபெற இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்நிலையில் 10-ம் வகுப்பு பொது தேர்வை 9,38,067 மாணவர்கள் எழுத இருக்கிறார்கள். இதனைமடுத்து 11-ஆம் வகுப்பு பொது தேர்வு 8,51,482 மாணவர்கள் எழுத இருக்கிறார்கள்.

அதன் பிறகு 12-ம் வகுப்பு பொது தேர்வை 7,87,783 மாணவர்கள் எழுத இருக்கிறார்கள். அதன்படி மொத்தமாக தமிழகத்தில் 25,77,332 மாணவர்கள் பொதுத் தேர்வு எழுத இருக்கிறார்கள். அனைத்து மாணவர்களும் பொது தேர்வுக்கு தயாராகி வருகிறார்கள். மேலும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பொதுத்தேர்வுகள் நடைபெற இருப்பதால் அதற்கான பணிகள் தற்போது முழு வீச்சில்ல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.