தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களின் படிப்பை ஊக்குவிக்கவும் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்குவதற்கும் கற்றல் இடைநீற்றலை தவிர்ப்பதற்கும் முதல்வரின் காலை உணவு திட்டம் அரசால் அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 1545 அரசு தொடக்கப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு முதல் கட்டமாக காலை உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி மதுரையில் தொடங்கி வைத்தார்.
இது நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படும் என முதல்வர் அறிவித்தார். அதன்படி இந்த திட்டத்தை அடுத்த கட்டமாக 500 பள்ளிகளில் விரிவாக்கம் செய்ய தமிழக அரசு தற்போது முடிவு செய்தது. அவ்வகையில் கூடுதல் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னையில் தொடங்கி வைக்கிறார். முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் மார்ச் 1ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது