தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மக்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்து சமூக இடைவேளை பின்பற்ற வேண்டும் என அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. மீண்டும் பாதிப்பு எண்ணிக்கை வேகம் எடுத்து வருவதால் தமிழகத்தில் தினசரி பாதிப்பு 120 கடந்து பதிவாகி வருகிறது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவ கட்டமைப்புகளுக்கு முக கவசம் அணிவது குறித்து ஓரிரு நாட்களில் அறிவிப்பு வெளியிடப்படும் என சுகாதாரத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறியுள்ளார். மருத்துவமனைக்கு வருபவர்களும் மருத்துவமனைகளில் பணியாற்றுபவர்களும் முக கவசம் அணிய வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.