மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சென்னை கலாஷேத்ராவில் பாலியல் தொல்லை தந்தபேராசிரியர் மீது நடவடிக்கை கோரி மாணவிகள் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவிகள் புகாரின் பேரில் விசாரணை நடத்த தமிழக தேசிய மகளிர் ஆணையம் டிஜிபிக்கு கடிதம் எழுதியதாகவும் ஆனால் திடீரென அந்த கடிதத்தை வாபஸ் பெற்றதாகவும் கலாசேத்ரா இயக்குனர் பாலியல் தொல்லை குறித்து புகார் கூற விடாமல் தடுப்பதாகவும் மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த நிலையில் சென்னை கால சேஸ்திராவுக்கு இன்று முதல் ஏப்ரல் ஆறாம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விடுதியில் தங்கியுள்ள மாணவிகளும் வெளியேற வேண்டும் என்றும் நடக்க இருந்த தேர்வுகளும் தள்ளி வைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலியல் தொல்லை அளித்த பேராசிரியர் மீது நடவடிக்கை கோரி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.