தமிழகத்தில் மகளிருக்கு ரூ.1000 உரிமைத்தொகை…. யாருக்கெல்லாம் கிடைக்காது?…. அமைச்சர் விளக்கம்….!!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என பட்ஜெட் தாக்கலில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார். ஆனால் 7 கோடி மட்டுமே இந்த திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் இதில் தமிழகத்தில் 2 கோடியே 10 லட்சம் ரேஷன் அட்டைகள் உள்ளன. அதனால் நிதி ஒதுக்கீடு பத்தாது என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அதற்கு பதில் அளித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், இந்த திட்டம் ஏழை மக்கள் அனைவருக்கும் நிச்சயம் சென்றடையும். அதிலும் குறிப்பாக குடிசை மாற்று வாரியத்தில் பயனடைந்த மக்களுக்கு இந்த திட்டம் முழுமையாக கிடைக்கும் என கூறினார்.

மேலும் இந்த திட்டம் யாருக்கு கிடைக்காது என்பது பற்றி சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் பேசுகையில், முதியோர் உதவித்தொகை பெறுவோருக்கு இந்த திட்டம் பொருந்தாது. அதனைப் போலவே வசதி படைத்தோர் இந்த திட்டத்தை எதிர்பார்க்க மாட்டார்கள். இவர்களை கழித்து விட்டாலே நிச்சயம் இந்த திட்டம் அனைவருக்கும் சென்று சேர்ந்து விடும் என தெரிவித்துள்ளார்.