சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் போதை பொருட்களை முற்றிலும் தடுப்பது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை செயலர், காவல்துறை அதிகாரிகள் மற்றும் தமிழக அரசின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் தமிழகத்தில் போதை பொருள் முற்றிலும் ஒழிக்கப்பட்ட போதிலும் மறைமுகமாக பல இடங்களில் போதை பொருள் விற்பனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கிடையே போதை பொருள் பழக்கம் இருக்கிறது. அதோடு இலங்கையில் இருந்து ஒரு போதை பொருள் கும்பல் இந்தியாவுக்குள் ஊடுருவியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த போதைப் பொருள் கும்பலை பிடிப்பது தொடர்பாகவும், மறைமுகமாக விற்பனை செய்யப்படும் கஞ்சா, குட்கா, புகையிலை உள்ளிட்ட போதைப்பொருட்களை முற்றிலும் தடுப்பது தொடர்பாகவும் பல்வேறு விதமான ஆலோசனைகள் நடைபெற்றுள்ளது.