தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாக பிப்ரவரி மாதம் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகள் நடைபெறும். இந்நிலையில் கடந்த வருடம் 11ஆம் வகுப்பு படைத்த செய்முறை தேர்வில் பங்கேற்காத மாணவர்கள் தற்போது நடைபெறும் செய்முறை தேர்வில் கலந்து கொள்ளலாம் என புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

கடந்த வருடம் 11ஆம் வகுப்பு செய்முறை தேர்வு எழுதாமல் தற்போது 12ஆம் வகுப்பு பயிலும் அரியர் மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வு மார்ச் 1 முதல் 9ஆம் தேதி வரை நடத்தப்படும் எனவும் அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் 11ஆம் வகுப்பு செய்முறை தேர்வு பட்டியல்களை dge1.tn.gov.in  என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.