தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த மே மாதம் மாணவர்களுக்கான பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் தோல்வி அடைந்த மற்றும் தேர்வுக்கு வர முடியாத மாணவர்களுக்காக துணை தேர்வு நடத்தப்படும் என அரசு அறிவித்தது

இந்தநிலையில் பிளஸ் 2 துணைத் தேர்வு எழுத விண்ணப்பித்த தனி தேர்வர்களுக்கு வருகின்ற ஜூன் 14ஆம் தேதி பிற்பகலில் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செய்முறை தேர்வுக்கான தேதி விவரங்களை தேர்வர்கள் தமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தேர்வு மையத்தின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். துணைத் தேர்வுக்கான அட்டவணையும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.