தமிழகத்தில் பிளஸ் 2 அரியர் மாணவர்களுக்கான செய்முறை தேர்வு குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பிளஸ் ஒன் வகுப்பில் செய்முறை தேர்வில் பங்கேற்காமல் தற்போது பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் அரியர் மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நடத்தப்பட உள்ளது. அதற்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் தலைமையாசிரியர்கள் அரியர் மாணவர்களுக்கான பிளஸ்-1 செய்முறை தேர்வு மதிப்பெண் பட்டியல்களை பிப்ரவரி 22 ஆம் தேதி முதல் dge1.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பிளஸ் ஒன் படிக்கும் மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகள் மார்ச் 1 முதல் 9ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. பிளஸ் டூ அரியர் மாணவர்களுக்கும் இந்த தேதிகளில் செய்முறை தேர்வு நடத்தி முடிக்க வேண்டும். மதிப்பெண்களை மார்ச் 11ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.