தமிழகத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் முடிவடைந்து கோடைவிடுமுறை விடப்பட்டது. மாணவர்களும் மகிழ்ச்சியாக கோடை விடுமுறையை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1ல் திறக்க இருந்த பள்ளிகள் வெயில் காரணமாக ஜூன் 7க்கு ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் வெயில் இன்னும் குறைந்தபாடில்லை.

கடந்த 4 நாட்களாக இயல்பை விட வெப்ப அளவு அதிகமாக உள்ளது. சென்னை உள்ளிட்ட இடங்களில் 108 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்துவதால், பள்ளி திறப்பை மீண்டும் ஒத்திவைக்க வேண்டும் அரசுக்கு கோரிக்கை எழுந்து வருகிறது. அதன்படி பள்ளி திறப்பு மீண்டும் தள்ளிப்போகுமா என்பது ஓரிரு நாளில் தெரியவரும்.