தமிழகத்தில் நியாய விலை கடைகள் மூலமாக ஏழை மற்றும் எளிய மக்களுக்கான அரிசி பருப்பு உள்ளிட்ட பொருட்கள் மலிவு விலையில் கிடைக்கிறது. இந்நிலையில் ரேஷன் கடை ஊழியர்கள் தற்போது 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்டிரைக் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். அதாவது ரேஷன் கடைகளை நிர்வகிக்க தனித்துறையை நியமிக்க வேண்டும், பொருட்களை பொட்டலமாக தரவேண்டும் உள்ளிட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற உள்ளது.
இதன் காரணமாக தமிழ்நாட்டில் நவம்பர் 13 முதல் 15ஆம் தேதி வரை அனைத்து ரேஷன் கடைகளும் செயல்படாது. மேலும் இதன் காரணமாக ரேஷன் கடை ஊழியர்களுடன் தமிழக அரசின் கூட்டுறவுத் துறையும் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.