
சென்னை கொளத்தூரில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகே நேற்று பொங்கல் விழா நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் அவருடைய மனைவி துர்கா ஸ்டாலினுடன் கலந்து கொண்டார். அதன் பிறகு நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசினார். அவர் பேசியதாவது, கொளத்தூரில் எந்த நிகழ்ச்சி நடைபெற்றாலும் நான் வந்து விடுவேன். பொங்கல் விழா மட்டும் இன்றி கிறிஸ்துமஸ் மற்றும் ரம்ஜான் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றாலும் நான் வருவேன். அதன் பிறகு நம்முடைய தொகுதியில் எந்த விழா நடந்தாலும் நான் உடனடியாக வரும் நிலையில் பொதுவாக பொங்கல் விழா என்பது மிகவும் ஸ்பெஷல்.
தமிழகத்தில் தேர்தல் வாக்குறுதியாக சொன்ன அனைத்தும் தற்போது திமுக அரசு நிறைவேற்றியுள்ளது. ஒன்று இரண்டு தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் இருக்கும் நிலையில் அதனையும் விரைவில் நிறைவேற்றுவோம். தமிழகத்தில் எப்படிப்பட்ட சிறப்பான ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது என்பதை மக்கள் அறிவார்கள். தமிழகத்தில் ஏற்கனவே கருணாநிதி தலைமையில் திமுக ஐந்து முறை ஆட்சி அமைத்த நிலையில் தற்போது என் தலைமையில் ஆறாவது முறை ஆட்சி அமைத்துள்ளோம். மேலும் கண்டிப்பாக இனிவரும் காலங்களிலும் தமிழகத்தில் திமுக ஆட்சி தான் அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. மீண்டும் ஏழாவது முறையாக திமுக ஆட்சி அமைக்கும் என்று கூறினார்.