தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோன்று புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயத்தில் இன்று தமிழகத்தில் உள் மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் கேரள கடலோர பகுதிகளுக்கு அருகே தென்கிழக்கு அரபிக்கடலில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் ஜனவரி 15ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் சென்னை பொறுத்தவரை இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவது காலை நேரத்தில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் பனி நிலவ கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.