தமிழகம் முழுவதும் 1 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், அரையாண்டு தேர்வு மற்றும் இரண்டாம பருவ தேர்வுகள், கடந்த 23ம் தேதி முடிந்தன. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை விடப்பட்டது. இதனைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை நேற்று முடிவடைந்து இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகிறது.

6- 12ம் வகுப்பு வரை ஜன.1ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டது. இதன்படி, இன்று (ஜன.2ம் தேதி) பள்ளிகள் திறக்கப்படுகிறது. ஆனால் 1-5ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜன. 4 வரை விடுமுறை அளிக்கப்பட்டு, ஜன.5ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது.