நெல்லை பணகுடி அருகில் ரோஸ்மியாபுரத்தில் வசித்து வந்தவர் இளைஞர் சிவன்ராஜ். இவர் தன் செல்போனில் சென்ற சில நாட்களாக ஆன்லைன் ரம்மி விளையாடி வந்ததாக கூறப்படுகிறது. பெற்றோருக்கு தெரியாமல் ரம்மி விளையாடி சுமார் 10 லட்சம் ரூபாய் வரையிலும் சிவன்ராஜ் இழந்துள்ளார். கடைசியில் நபர் ஒருவரிடம் கடன் வாங்கி நேற்று ஒரே நாளில் ரூபாய்.1 லட்சத்தை இழந்திருக்கிறார் சிவன்ராஜ்.

இதன் காரணமாக மனமுடைந்த சிவன்ராஜ் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். ஆன்லைன் ரம்மியால் இதுவரை தமிழகத்தில் பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். எனினும் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆன்லைன் ரம்மி தடை மசோதாவிற்கு இன்னும் ஒப்புதல் அளிக்காதது குறிப்பிடத்தக்கது.