தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருவதால் பல அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று தென்காசி மாவட்டம் குற்றால அருவியில் திடீரென்று ஏற்பட்ட வெள்ளத்தைக் கண்டு மக்கள் மிரண்டு ஓடிய காட்சி தான் பலரையும் பதற வைத்துள்ளது. அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் கோடை விடுமுறையில் சுற்றுலா செல்லும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.