திருச்சி கோட்டத்தில் உள்ள தபால் அலுவலகங்களில்  தங்கப்பத்திரம் விற்பனை வருகின்ற  23 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சியில் அஞ்சல் கோட்டத்தில் உள்ள அனைத்து தலைமை மற்றும் துணை அஞ்சலகங்களில் தங்க பத்திரம் விற்பனை நடைபெறும்.
இங்கு 24 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு 5,926 ரூபாய் ஆகும். தனிநபர் இந்த திட்டத்தில் ஒரு கிராம் முதல் 4 கிலோ வரை முதலீடு செய்து பத்திரங்களை பெற்றுக் கொள்ளலாம். ஆண்டுக்கு 2.5% வட்டி வழங்கப்படும். வட்டித்தொகை 6 மாதங்களுக்கு ஒரு முறை முதலீட்டாளர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.