தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு என்னும் கிராமத்தில் இளம்பெண் (22) ஒருவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய நிலையில் தற்போது இவர் விடுமுறை நாட்களில் வீட்டுக்கு வந்துள்ளார். இந்நிலையில் சம்பவ நாளான்று கடை தெருவுக்கு சென்று விட்டு வீடு திரும்பிய அவரை சில வாலிபர்கள் கடத்திச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.அதன்பின் அந்த வாலிபர்கள் இந்த சம்பவத்தை அவர்களது செல்போனில் வீடியோவாகவும் பதிவிட்டுள்ளனர்.
இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் இச்சம்பவம் பற்றி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். இதில் பாப்பநாடு பகுதியைச் சேர்ந்த திவாகர், கவிதாசன், பிரவீன் மற்றும் 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. மேலும் காவல்துறையினர் அவர்களை கைது செய்ததுடன் கோட்டில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.