தமிழகத்தில் அரசு வணிகவியல் தட்டச்சு தேர்வில் தேர்ச்சி பெற்ற தனித் தேர்வர்கள் தங்களது சான்றிதழ்களை மாவட்டம் மற்றும் மண்டல விநியோக மையங்களில் வருகின்ற அக்டோபர் ஒன்பதாம் தேதி முதல் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் சார்பில் ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இளநிலை மற்றும் முதுநிலை தமிழ், ஆங்கிலம் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தேர்வு நடைபெறுகின்றது.

அதன்படி கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற தட்டச்சு தேர்வில் தேர்ச்சி பெற்ற தனித்தேர்வர்கள் உரிய ஆதாரங்களுடன் அடையாள அட்டை, ஆதார் மற்றும் தேர்வு மைய சீட்டு என ஏதாவது ஒன்றை காண்பித்து அக்டோபர் ஒன்பதாம் தேதி முதல் அக்டோபர் 11ஆம் தேதி வரை தேர்வு எழுதிய மாவட்டம் மற்றும் மண்டல விநியோக மையங்களில் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.