ஐஆர்சிடிசி ஆனது பயணிகள் உடைய திடீர் பயணத்திற்கு தேவையான டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு தட்கல் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலமாக பயணிகள் ஒரு நாளைக்கு முன்னதாகவே தங்களுடைய டிக்கெட்டை முன்பதிவு செய்து கொள்ளலாம். இதற்காக குறிப்பிட்ட இடங்கள் ஒதுக்கப்பட்டு இருக்கும். இருப்பினும் இதில் முன் பதிவு செய்யப்பட்ட டிக்கெட் தவிர்க்க முடியாத சில காரணங்களால் ரத்து செய்ய வேண்டிய சூழல் ஏற்படும். இது போன்ற சூழலில் டிக்கெட் கட்டணம் ரயில்வே வாரியத்தில் மீண்டும் பயணிகளுக்கு அளிக்கப்படும்.

இது குறித்து அதிகபூர்வ தகவல் தளத்திலிருந்து தகவலை பெற்றுக் கொள்ளலாம். அதன்படி ரயில் திசை மாறிய பாதை மற்றும் போர்டிங் ஸ்டேஷன் அல்லது சேரும் இடம் அல்லது இரண்டு ரயில் நிலையங்களும் திசைதிருப்பட்ட பாதையில் இல்லை என்றால் முழு பணமும் திரும்ப அளிக்கப்படும். தட்கல் டிக்கெட் காத்திருப்பில் இருந்தால் சில தொகை அளிக்கப்படும். மீதமுள்ள தொகை வாடிக்கையாளர்களுக்கு திருப்பி கொடுக்கப்படும். விபத்து, வெள்ளம் போன்ற காரணங்களால் ரயில் ரத்து செய்யப்பட்டால் ரயில் புறப்பட்ட மூன்று நாட்களுக்குள் டிக்கெட் ரத்து செய்யப்பட்டால் முழு பணமும் திரும்ப கொடுக்கப்படும்.