தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 4 கட்ட போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா. இவர் பெரியமேட்டில் இருக்க கூடிய தனியார் ஹோட்டலில் இன்று அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தின் முடிவுக்கு பின் விக்கிரமராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 4 கட்ட போராட்டங்கள் நடத்தப்படும். டெஸ்ட் பர்சேஸ் முறையை கைவிட வலியுறுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும் மாநில அரசாங்கம் டெஸ்ட் பர்சேஸ் முறையை நிறுத்தி வைக்க முடியும். எனவே உடனடியாக மாநில அரசு இதனை தலையிட்டு டெஸ்ட் பர்சேஸ் முறையை கைவிட வேண்டும் என வலியுறுத்தி முதல் கட்ட போராட்டம் வரக்கூடிய 10ஆம் தேதி கருப்பு பேட்ச் அணிந்து கையில் பதாகைகளை ஏந்தி யாரெல்லாம் அமைப்பில் இருக்கிறார்களோ அவர்கள் கடைக்கு முன்பு நின்று பொது மக்களுக்கு எந்த இடையூறும் இல்லாமல் ஒரு போராட்டத்தை அறிவித்துள்ளார். பொங்கல் பண்டிகை இருப்பதால் மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதால் 10ஆம் தேதி போராட்டம் நடத்துகிறோம் எனவும், இதே மாதம் 24 ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கவன ஈர்ப்பு போராட்டத்தை  நடத்த திட்டமிட்டுள்ளனர்.

எனவே 24ஆம் தேதி எல்லா மாவட்டங்களிலும் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்படும் எனவும், அப்போதும் அரசு டெஸ்ட் பர்சேஸ் முறையை கைவிடவில்லை என்றால் அன்று மாலையே அடுத்த கட்ட போராட்டமாக ஒரு உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளனர். அந்த உண்ணாவிரத போராட்டத்தை அன்றைய தேதியில் தான் குறிப்பிடுவோம் என தெரிவித்துள்ளனர்.

இந்த உண்ணாவிரத போராட்டம் நடத்துவதற்கு முன்பாக அரசு தலையிட்டு இந்த டெஸ்ட் பர்சேஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். அப்பொழுதும் அரசு செவி சாய்க்கவில்லை என்றால் உண்ணாவிரதப்போராட்டம் நடைபெறும் நாளில் கடை அடைப்பு போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளனர்.