டெல்லியில் ஷ்ரத்தா வாக்கர் என்ற இளம் பெண் காதலன் அப்தாப்பால் 35 துண்டுகளாக வெட்டப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் அப்தாப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவர் கொடுத்த வாக்குமூலத்தின் பெயரில் காவல்துறையினர் ஷ்ரத்தாவின் உடல் பாகங்களை பல்வேறு இடங்களில் தேடினர்.

இதில் 23 எலும்பு துண்டுகள் கிடைத்த நிலையில் அவை உடற்கூறாய்வுக்காக அனுப்பப்பட்டது. இந்த உடற்கூறாய்வின் போது இளம் பெண்ணின் எலும்புகள் ரம்பத்தின் மூலம் வெட்டப்பட்டது தெரிய வந்துள்ளது. ஏற்கனவே அப்தாப் ஷ்ரத்தாவை கொலை செய்து உடலை ரம்பத்தின் மூலம் வெட்டியதாகத்தான் வாக்குமூலம் கொடுத்திருந்தார். மேலும் உடற்கூறாய்விலும் ரம்பத்தின் மூலம் இளம்பெண்ணின் உடல் வெட்டப்பட்டது தெரிய வந்துள்ள நிலையில், இது தொடர்பான அறிக்கை விரைவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது.