தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் நடிகர் அஜித் மற்றும் விஜயின் வாரிசு துணிவு படங்கள் முறையை கடந்த மாதம் 11-ஆம் தேதி ரிலீசானது. இந்த படத்தை அதிகாலை நேரத்தில் சட்டவிரோதமான முறையில் வெளியிட அனுமதி கொடுத்து ஆதாயம் அடைந்ததாக தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என சவுக்கு சங்கர் தமிழக ஆளுநர் ரவியிடம் புகார் கொடுத்து இருந்தார்.

இந்நிலையில் இன்று காலை தமிழக ஆளுநர் ரவி டெல்லிக்கு சென்றுள்ளார். டெல்லிக்கு சென்றுள்ள ஆளுநர் சவுக்கு சங்கர் கொடுத்த புகார் மனுவை உள்துறை அமைச்சகத்திடம் கொடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இதன் காரணமாக தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு தற்போது புதிய பிரச்சனை வந்துள்ளதாக கூறுகிறார்கள்.