இன்று உலகம் முழுவதும் இருப்பவர்கள் பயன்படுத்தும் இன்ஸ்டண்ட் மெசேஜிங் பிளாட்பார்ம் வாட்ஸ்அப். இது மிக முக்கிய சமூகவலைதளம் என்பதால் சாமானியர்கள் முதல் முக்கிய தலைவர்கள் வரை இச்செயலியை பயன்படுத்துகின்றனர். இதற்கிடையில் ஒருவேளை நாம் யாருக்காவது தவறுதலாக செய்தி அனுப்பிவிட்டாலோ (அ) யாராவது நமக்கு தவறுதலாக செய்தி  அனுப்பிவிட்டாலோ அதை உடனே டெலிட் செய்யும் வசதியும் வாட்ஸ்அப்-ல் இருக்கிறது.

அதே நேரம் டெலிட் செய்யப்பட்ட செய்திகளை மீண்டுமாக நம்மால் படிக்க முடியும். அதாவது ஆண்ட்ராய்டு-11(அ) அதற்கு வெர்சனுடைய ஸ்மார்ட்போன் நம்மிடம் இருக்க வேண்டும்.  ஆண்ட்ராய்டு போன்லேயே இதற்கான ஆப்சன் உள்ளது. உங்களது ஸ்மார்ட் போனில் செட்டிங் ஓபன் செய்து ஆப்ஸ் & நோட்டிஃபிகேசன் விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும்.

நோட்டிபிகேசன் என்பதை கிளிக் செய்து, அதில் நோட்டிபிகேசன் ஹிஸ்டரி எனும் பட்டனை அழுத்தவும். அதன்பின் யூஸ் நோட்டிஃபிகேசன் ஹிஸ்டரி என்ற விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும். அடுத்ததாக உங்களது போனில் வரும் நோட்டிபிகேஷன்கள், வாட்ஸ்அப் மெசேஜ்ஜஸ் உட்பட அனைத்தும் இந்த பக்கத்தில் தோன்றும். இதன் வாயிலாக மீண்டும் அந்த மெசேஜை நீங்கள் படித்துக் கொள்ளலாம். இந்த எளிய செயல்முறையை தற்போது செய்துவிடுங்கள்.