ஆப்பிள் கேஜெட்டுகள் பயன்படுத்துவோருக்கு ஆப்பிள் ஐடி மற்றும் பாஸ்வேர்டின் பயன்பாடு குறித்து தெரியும். ஆண்ட்ராய்டு போன்களில் மெயில் ஐடியை வைத்து உள்நுழைந்து பழைய போனில் உள்ள தரவுகளை புது சாதனத்திற்கு கொண்டு வருகிறோமோ, அதேபோன்று ஆப்பிள் சாதனங்களை பயன்படுத்தும் பயனாளர்கள் தங்களுக்கான ஆப்பிள் ஐடி வாயிலாக எத்தனை சாதனங்களை வேண்டுமானாலும் இணைத்துக்கொள்ளலாம். இதற்கிடையில் உங்களது ஐபோன் திருடப்பட்டால் என்ன செய்வது என்பது குறித்து நாம் தெரிந்துக்கொள்வோம்.

Find My ஆப் வாயிலாக உங்களது சாதனத்தை “Lost” எனக் குறிக்க வேண்டும். Find My ஆப் வாயிலாக உங்களது சாதனத்திலுள்ள தரவுகளை அழிக்க வேண்டும். உங்கள் உள்ளூர் போலீஸ் நிலையம் (அ) ஆன்லைனில் FIR பதிவு செய்ய வேண்டும். எஃப்ஐஆர் நகல் மற்றும் போன் வாங்கியதற்குரிய ஆதாரத்தை மொபைல் ஆபரேட்டர்களுக்கு அனுப்ப வேண்டும். இதன் காரணமாக அவர்கள் IMEI எண்ணை தங்களது நெட்வொர்குகளில் பயன்படுத்துவதை தடுத்துவிடுவர். இவ்வாறு நடந்தால் அந்த ஆப்பிள் சாதனத்தை இந்தியாவில் எங்கும் விற்பனை செய்ய இயலாது.