தற்போது நடிகர் ரஜினிகாந்த் நெல்சன் திலீப்குமார் டைரக்டு செய்யும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் முத்துவேல் பாண்டியன் எனும் கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் வருகிறார். இப்படத்தில் கன்னட நடிகர் சிவராஜ் குமார், மலையாள நடிகர் மோகன்லால், தெலுங்கு நடிகர் சுனில், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, யோகிபாபு, விநாயகன் மற்றும் வசந்த் ரவி உட்பட பல முன்னணி நடிகர்கள் நடிகின்றனர்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இத்திரைப்படத்தின் சூட்டிங் மும்முரமாக நடந்து வருகிறது. அண்மையில் ஜெயிலர் படத்தில் பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் இணைந்து உள்ளதாக படக்குழு அறிவித்து இருந்தது. இந்த நிலையில் ஜெயிலர் படப்பிடிப்பு தள வீடியோவை நடிகை தமன்னா தன் இணையப்பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். இந்த வீடியோவானது தற்போது சமூகவலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
#Jailer Shooting spot 😃😃.@tamannaahspeaks IG story. pic.twitter.com/YmcM8O32WZ
— HELLO (@ROCKINGg25) February 24, 2023