திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லை வாயில் பகுதியில் சிவக்குமார் என்பவர் வசித்து வருகின்றார். இவரும் அதே பகுதியை சேர்ந்த நித்தியா என்ற பெண்ணும் காதலித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் சேர்ந்து திருமுல்லை வாயில் பகுதியில் உடற்பயிற்சி கூடம் நடத்தி வருகின்றனர். இதில் சென்னை தனியார் மருத்துவமனையில் அட்மினாக பணிபுரியும் திருமணமான 35 வயதுடைய பெண் ஒருவர் உடல் பருமனை குறைக்க கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் இவர்களது உடற்பயிற்சி கூடத்தில் சேர்ந்துள்ளார்.

இதில் தினம்தோறும் ஜிம்முக்கு வந்து செல்லும் இந்த பெண்ணிற்கும் ஜிம் மாஸ்டருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பழக்கம் நாளடைவில் நெருக்கமாக மாறியது. அது மட்டுமல்லாது ஜிம்மிலேயே இருக்கும் தனி அறையில் இருவரும் நெருக்கமாக இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் ஜும் மாஸ்டர் சிவகுமாரும் அந்த பெண்ணும் நெருக்கமாக இருப்பதை நித்தியா செல்போனில் வீடியோ எடுத்து வைத்துள்ளார். அதோடு நித்தியா இந்த வீடியோவை அந்த பெண்ணிடம் காட்டி பணம் பறித்து வந்துள்ளார்.

இதுகுறித்து அந்த பெண் ஜிம் மாஸ்டர் சிவகுமாரிடம் கூறிய போது பணத்தை கொடுத்து விடுமாறும், வீடியோ வெளியே சென்றால் இருவருக்கும் பிரச்சனை என்றும் கூறியுள்ளார். இதனால் செய்வதறியாது திகைத்த அந்த பெண்ணிடம் பல லட்சம் ரூபாயை நித்தியா மிரட்டி பறித்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் அளவுக்கு அதிகமாக பணம் கேட்டதால் அந்த பெண் தன்னுடைய கணவரிடம் இது பற்றி கூறியுள்ளார். பின்னர் அப்பெண்ணின் கணவர் திருமுல்லைவாயில் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

அந்த புகாரை ஏற்றுக்கொண்ட காவல்துறையின ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றிய அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் முதல் கட்ட விசாரணையாக நித்தியா பணம் பறித்ததில் அவரது காதலன் மாஸ்டருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அவர்கள் இருவரையும் கைது செய்ய முயன்ற போது தப்பி தலைமறைவாகி விட்டனர். ஆகவே காவல்துறையினர் ஜிம் மாஸ்டர் சிவகுமாரையும் அவரது காதலி நித்தியாவையும் வலை வீசி தேடி வருகின்றனர்.