ஜனவரி 2023 இல் 14 நாட்கள் வங்கி விடுமுறையாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி ரிசர்வ் வங்கி வெளியிட்ட பட்டியலில் சில விடுமுறை நாட்கள் உள்ளூர் விடுமுறைகள் ஆகவும் உள்ளது. இந்த விடுமுறைகள் சில குறிப்பிட்ட மாநிலங்களுக்கு மட்டுமே பொருந்தும். அது தவிர ஒவ்வொரு மாதமும் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் மற்றும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளும் வங்கிகள் மூடப்படுவது வழக்கம்.

ஜனவரி 1, 2023 (ஞாயிறு) : புத்தாண்டு தினம், ஞாயிறு விடுமுறை

ஜனவரி 2, 2023 (திங்கட்கிழமை) : புத்தாண்டு கொண்டாட்டம், மிசோரம்

ஜனவரி 5, 2023 (வியாழன்) : குரு கோவிந்த் சிங் ஜெயந்தி, ஹரியானா மற்றும் ராஜஸ்தானில் வங்கி விடுமுறை

ஜனவரி 8, 2023 (ஞாயிறு) : ஞாயிறு வங்கி விடுமுறை

ஜனவரி 11, 2023 (புதன்கிழமை) : மிஷனரி தினம், மிசோரம்

ஜனவரி 14, 2023 (சனிக்கிழமை) : இரண்டாவது சனிக்கிழமை வங்கி விடுமுறை

ஜனவரி 15, 2023 (ஞாயிறு) : ஞாயிறு வங்கி விடுமுறை

ஜனவரி 22, 2023 (ஞாயிறு) : ஞாயிறு வங்கி விடுமுறை

ஜனவரி 23, 2023 (திங்கட்கிழமை) : திரிபுரா மற்றும் மேற்கு வங்கத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஜெயந்தி வங்கி விடுமுறை

ஜனவரி 25, 2023 (புதன்கிழமை) : மாநில தினம், இமாச்சலப் பிரதேசம்

ஜனவரி 26, 2023 (வியாழன்) : குடியரசு தினம்

ஜனவரி 28, 2023 (சனிக்கிழமை) : 4வது சனிக்கிழமை வங்கி விடுமுறை

ஜனவரி 29, 2023 (ஞாயிறு): வங்கி விடுமுறை வார இறுதி

ஜனவரி 31, 2023 (திங்கட்கிழமை) : அசாமில் மீ-டேம்-மீ-ஃபை (Me-Dam-Me-Phi) வங்கி விடுமுறை