ஒவ்வொரு மாதத்தின் ஆரம்பத்திலும் அரசு புதிய விதிகளை அமலுக்கு கொண்டு வருவது வழக்கம். அதன்படி இந்த வருடம்  ஜனவரி மாதத்தில்(இன்று முதல்) சிலிண்டர் முதல் வங்கி சேவைகள் வரை பலவற்றிலும் பல்வேறு விதமான மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளது. இதனால் மக்கள் சிறிது அச்சத்தில் உள்ளனர். அதன்படி,

கார்களின் விலை குறைந்தபட்சம் 23,000 முதல் உயர்வு.

கிரெடிட் கார்டுகளில் புதிய நடைமுறைகள் வரவுள்ளது.

ஜிஎஸ்டி விதிகளில் மாற்றம்.

-ரேஷன் கடைகளில் ‘கரீப் கல்யாண யோஜனா திட்டம்’ மூலம் வழங்கப்பட்டு வந்த இலவச பொருட்கள் 2023 டிச.,31 வரை நீடிக்கும்.

ஒவ்வொரு மாத தொடக்கத்திலும், சிலிண்டர் விலைகளில் மாற்றம் வரும் என்பதால், இந்த முறை இது குறையுமா, கூடுமா என்பதுதான் எதிர்பார்ப்பு.