தென்காசி மாவட்டம், சுரண்டை பகுதியைச் சேர்ந்த சிம்மி என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் தனது அக்கா மற்றும் உறவினர்  பெண் ஒருவரோடு சேர்ந்து சுரண்டையில் இருந்து கடையம் பகுதிக்கு பழைய துணி வாங்க பேருந்தில் சென்றுள்ளனர்.

அப்போது ஒரு இருக்கையில் அமர்ந்திருந்தபோது சேந்தமரம் காவல் உதவி ஆய்வாளர் ஜெயராஜ் மனைவி பால்தாய் வேறு இருக்கையில் அமர சொல்லியுள்ளார். ஆனால் அதற்கு முடியாது என மறுத்ததால் தனது பர்ஸை காணவில்லை எனக்கூறி காவல் நிலையத்தில் பொய்யாக புகார் அளித்து என்னுடைய அக்கா மற்றும் உறவினர் பெண்ணை சிறையில் அடைத்துள்ளனர் என கூறியுள்ளார்.