ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்த நிலையில் இன்று காலை முதல் விறுவிறுப்பாக வாக்கு  எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. முதலில் ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா ஆகிய இரு தொகுதிகளிலும் காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலை வகித்த நிலையில் திடீரென ஹரியானாவில் பாஜக முன்னிலை வகித்தது. நாடும் முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வினேஷ் போகத் தொடர்ந்து முன்னிலை வகித்த நிலையில் திடீரென பின்னடைவை சந்தித்து விட்டார்.

இந்நிலையில் ஹரியானாவில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் ‌ பெரும்பான்மைக்கு 48 இடங்கள் தேவைப்படும் நிலையில் தற்போது பாஜக 47 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதன் பிறகு காங்கிரஸ் 37 இடங்களிலும் பிற கட்சிகள் 7 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. ஜூலானா தொகுதியில் போட்டியிட்ட வினேஷ் போகத்தை விட பாஜக வேட்பாளர் யோகேஷ் குமார் 3641 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.

இதேபோன்று முன்னாள் முதல்வர் பூபேந்தர் சிங் ஹூடா 30,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கும் நிலையில் அரியானா முதல்வர் நயாப் சிங் சைனியும் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். இதன் மூலம் ஹரியானாவில் பாஜக வெற்றி வாகை சூட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அதே சமயத்தில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பெரும்பான்மைக்கு தேவையான 46 இடங்களில் காங்கிரஸ் கூட்டணி 47 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதன் பிறகு பாஜக 28 இடங்களிலும் மற்ற கட்சிகள் 15 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. மேலும் இதனால் ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் ஆட்சி அமைய உள்ளது.