புதுச்சேரியில் வரும் ஜனவரி 16ஆம் தேதி மதுக்கடைகள் மூட புதுவை கலால்துறை துணை ஆணையர் சுதாகர்  உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் இயங்கி வரும் அனைத்து கள், சாராயம் மற்றும் பார் உள்பட அனைத்து வகை மதுக்கடைகளும், மது அருந்த அனுமதிக்கப்பட்ட உணவகங்களில் உள்ள பார்களும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

திருவள்ளூவர் தினத்தை முன்னிட்டு இந்த உத்தரவு  பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதை மீறி சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் வாங்கி, பதுக்கி வைத்து விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதே உத்தரவு தமிழகத்தில் அறிவிக்கப்படவில்லை.