திருச்சி மாவட்டத்தில் ஒரு அரசு உதவி பெறும் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஐயப்பன் என்பவர் (52) ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் அதே பள்ளியில் 8-ம் வகுப்பு மாணவிகள் 2 பேருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக தகவல் அறிந்த மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில் ஆசிரியர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. இதைத்தொடர்ந்து ஐயப்பனை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் பள்ளியில் வைத்தே ஆசிரியர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது பெற்றோர் மத்தியில் அதிர்த்சியை ஏற்படுத்தி உள்ளது.