ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சரக்கு ரயிலுடன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 233 ஆக அதிகரித்துள்ளது. இந்த விபத்தில் 900 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்து நடந்த இடத்தில் இருந்து 120 இறந்த உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக ஒடிசா தீயணைப்பு சேவை இயக்குநர் ஜெனரல் சுதன்சு சாரங்கி தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று நடைபெறவிருந்த கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக திமுக தலைமை அறிவித்துள்ளது. சோகமான சூழ்நிலையில் கலைஞரின் நூற்றாண்டு பிறந்தநாள் கொண்டாட்டங்களை நடத்துவது சரியல்ல. எனவே. தமிழகம் முழுவதும் உள்ள திமுக தொண்டர்கள் கலைஞரின் சிலைக்கு மரியாதை செலுத்தி, இறந்தோருக்கு மவுன அஞ்சலி செலுத்துமாறு கட்சி தலைமை கேட்டுக் கொண்டுள்ளது.