தமிழ்நாடு பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் ஏழாவது சீசன் வருகின்ற ஜூன் 12ஆம் தேதி கோவையில் தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து சேலத்தில் வருகின்ற 24-ஆம் தேதி டிஎன்பிஎல் போட்டி நடைபெறுகிறது. சேலத்தில் வருகின்ற 24-ஆம் தேதி மதியம் மூன்று மணிக்கு சென்னை ராயல் கிங்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணிகள் மோதுகின்றன. இரவு 7 மணிக்கு சேலம் ஸ்பார்ட்டன்ஸ், சீகம் மதுரை பேந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன.

அதன்படி சேலம் வாழப்பாடி உள்ள தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் மைதானத்தில் டிஎன்பிஎல் தொடரின் 10 போட்டிகள் நடைபெற உள்ளது. 6500 பேர் போட்டிகளை பார்வையிடும் வகையில் இருக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. 200 முதல் 1500 ரூபாய் வரை டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆன்லைன் முறையில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.