தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் விஜய்யின் அடுத்த படமான தளபதி 69 குறித்த அப்டேட் இன்று வெளியாகியுள்ளது. இந்த செய்தி விஜய் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சினிமாவை விட்டு விலகி முழுநேர அரசியலில் ஈடுபடவிருக்கும் விஜய், தளபதி 69 படத்திற்கு பிறகு நடிக்கப்போவதில்லை என்பதால், இந்த படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு மிக அதிகமாக உள்ளது. ஏற்கனவே வெளியான தி கோட் படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தளபதி 69 படம் மேலும் பெரிய வெற்றியை பெறும் என ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
தளபதி 69 படத்தை பிரபல இயக்குனர் எச். வினோத் இயக்கவுள்ளார். இந்த படத்தை KVN தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இவர்கள் தமிழில் முதல்முறையாக படம் தயாரிக்கும் நிலையில் அது தளபதியின் படமாக அமைந்துள்ளது. இந்நிலையில் தளபதி 69 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை தற்போது கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பில் எச். வினோத் தளபதி 69 படத்தை இயக்குகிறார் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். அதன் பிறகு கையில் தீப்பந்தத்தை விஜய் ஏந்தியுள்ளவாறு ஒரு போஸ்டரை வெளியிட்டு அதில் The Torch of Bearer of democracy என்ற வாசகம் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த படம் அடுத்த வருடம் அக்டோபரில் ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த போஸ்டரை தளபதி ரசிகர்கள் வைரல் ஆக்கி வருகிறார்கள். மற்ற நடிகர் நடிகைகள் குறித்த விவரங்கள் வெளிவரவில்லை. மேலும் இந்த படம் அடுத்த வருடம் அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
We are beyond proud & excited to announce that our first Tamil film is #Thalapathy69, directed by the visionary #HVinoth, with music by the sensational Rockstar @anirudhofficial 🔥
Super happy to collaborate with the one and only #Thalapathy @actorvijay ♥️
The torch bearer of… pic.twitter.com/Q2lEq7Lhfa
— KVN Productions (@KvnProductions) September 14, 2024