
தேனி மாவட்டத்தில் உள்ள போடிநாயக்கனூர் பகுதியில் இருந்து சென்னைக்கு எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய்குமார் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, போடி முதல் மதுரை வரை உள்ள அகல ரயில் பாதையில் 80 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில்களை இயக்கலாம். இதில் சில இடங்களில் கிளாம்புகளை சரி செய்வதோடு, தங்கப்பாலம் என்ற இடத்தில் பொருத்தப்பட்டிருக்கும் பைப்லைன்களையும் சரி செய்ய வேண்டும்.
ரயில் நிலையங்களில் பயணிகளை கையாள்வதற்கும், சரக்குகளை கையாள்வதற்கும் போதிய வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மதுரையில் இருந்து போடி வரையிலான ரயில் சேவையை சென்னை வரை விரிவாக்கம் செய்ய வேண்டும் என மதுரை,தேனி மாவட்ட மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில் அந்த கோரிக்கையை தற்போது தெற்கு ரயில்வே ஏற்றுள்ளது. அதன்படி மதுரை- போடி எக்ஸ்பிரஸ் ரயில்கள் சென்னை வரை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த ரயில் சேவை பிப்ரவரி 19-ஆம் தேதி முதல் தொடங்குகிறது.