சென்னை மக்களுக்கு எச்சரிக்கை..! அடுத்த 48 மணி நேரத்திற்கு..!!!

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், வளிமண்டல சுழற்சி காரணமாக சென்னை உட்பட தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களில் வருகின்ற 22 ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் மழை பெய்யும் என்றும் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் இடியுடன் மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply