தமிழகத்தில் தினம் தோறும் லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணிக்கின்றனர். மற்ற போக்குவரத்துடன் ஒப்பிடும்போது மிகக் குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக ரயிலில் பயணிக்க முடியும் என்பதால் பலரும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். அதனால் ரயில் பயணிகளின் வசதிக்கு ஏற்றவாறு அவ்வபோது சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
அதன்படி சென்னையிலிருந்து நெல்லை மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வாராந்திர சிறப்பு விரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் இந்த ரயில் சேவை நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. எழும்பூர் மற்றும் நெல்லை சிறப்பு ரயில் வருகின்ற ஆகஸ்ட் 22ஆம் தேதி முதல் செப்டம்பர் 5ஆம் தேதி வரையும், வேளாங்கண்ணி ரயில் ஆகஸ்ட் 23 முதல் செப்டம்பர் 8 வரையும், தாம்பரம் மற்றும் ராமநாதபுரம் ரயில் ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 14 வரையும் நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.