சென்னையில் பன்னாட்டு புத்தக கண்காட்சி… அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு…!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக பள்ளி கல்லூரி மாணவர்களின் வசதிக்காக பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அடுத்த வருடம் ஜனவரி 16 முதல் 18ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு சென்னை பன்னாட்டு புத்தகக் கண்காட்சி நடைபெறும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.

இந்த பன்னாட்டு புத்தகக் காட்சி நந்தம்பாக்கம் வர்த்தக மைதானத்தில் நடைபெற உள்ளதாகவும் இதில் சிறப்பு விருந்தினர் நாடக மலேசியா கௌரவிக்கப்பட உள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் தமிழ் நூல்களை ஏனைய உலக மொழிகளில் மொழிபெயர்க்க மானியமாக மூன்று கோடி ரூபாய் நிதி வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.