பிப்ரவரி 1ஆம் தேதி அன்று 2023-24 ஆம் வருடத்திற்கான பட்ஜெட் நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களால் தாக்கல் செய்யப்பட்டது. இதில் மாத சம்பளம் பெறுபவர்களுக்கு பல்வேறு வகையான சலுகைகள் அறிவிக்க ப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் ஜிஜேந்திர சிங் தெரிவித்துள்ளதாவது, மத்திய அரசு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

குறிப்பாக ரோஸ்கர் மேளா மூலம் வேலைவாய்ப்பற்ற பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி வருகிறது. இந்த திட்டத்தின் மூலமாக ஒரு வருட காலத்திற்குள் 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு மற்றும் சுய வேலைவாய்ப்பு தரப்படும். அத்தோடு மத்திய அரசு 78 அமைச்சர்கங்கள் மற்றும் பல்வேறு துறைகளில் 9.79 லட்சம் காலி இடங்கள் வரை உள்ளது. இதில் ரயில்வே துறையில் 2.93 லட்சம் பணியிடங்களும் பாதுகாப்பு துறையில் 2.64லட்சம் பணியிடங்களும், உள்துறை அமைச்சகத்தில் 1.4 லட்சம் பணிடங்களும் காலியாக உள்ளதாக தெரிவித்துள்ளார்