ஆந்திர மாநிலத்தின் முதல்வராக சந்திரபாபு நாயுடு இருக்கிறார். இவர் அனக்கா பள்ளி மாவட்டம் பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இவர் நேற்று அந்தப் பகுதியில் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு தன்னுடைய காரில் ஏறுவதற்காக சென்றார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த பெண் கையில் பூங்கொத்துடன் சந்திரபாபு நாயுடுவை சந்திக்க வந்தார். ஆனால் அந்த பெண்ணை முதல்வரிடம் நெருங்கவிடாமல் பாதுகாவலர்கள் தடுத்த நிலையில் பின்னர் சந்திரபாபு நாயுடு அந்த பெண்ணை தன்னிடம் விடுமாறு கூறினார்.
அதன் பிறகு சந்திரபாபு நாயுடு அருகில் வந்த அந்த பெண் பூங்கொத்தை கொடுத்த பிறகு பலமுறை அவருக்கு கன்னத்தில் முத்தமிட முயன்றார். ஆனால் நிதானமாக சந்திரபாபு நாயுடு அதனை தடுத்துவிட்டார். பின்னர் சந்திரபாபு நாயுடு தன்னுடன் போட்டோ எடுத்துக் கொள்ள மட்டும் அனுமதி கொடுத்த நிலையில் சந்திரபாபு நாயுடு உடன் சேர்ந்து அந்த பெண் செல்பி எடுத்துக் கொண்டார். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
సీఎం చంద్రబాబుకి ముద్దు పెట్టిన మహిళ pic.twitter.com/IKTuITovPG
— Telugu Scribe (@TeluguScribe) November 2, 2024