கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் பங்காருபேட்டை பகுதி உள்ளது. இங்கு ராஜ்குமார் என்பவருக்கு சொந்தமான மூன்று மாடி கட்டிடம் அமைந்துள்ளது. இந்த கட்டிடத்தின் தரைத்தளத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெற்றது. இந்நிலையில் இந்த அடுக்குமாடி கட்டிடம் என்று திடீரென சீட்டுக்கட்டு போல் சரிந்து இடிந்து விழுந்து சுக்குநூறாகியது.

இந்த வீட்டிலிருந்த மூவரை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக வெளியேற்ற நிலையில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வரும் நிலையில் தற்போது இது குறித்த வீடியோ வெளியாகி பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.