புதுச்சேரியில் சிறுவர்கள் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் பைக் ஓட்டினால் பெற்றோர்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறை மற்றும் 25 ஆயிரம் ரூபாய் அபராதம்,ஓராண்டு வாகனத்தின் பதிவு சான்று ரத்து ஆகும் என போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதனைப் போலவே ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் கூறியுள்ளார். மேலும் வாகனம் ஓட்டும்போது வாகன ஓட்டிகள் தங்களது அசல் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும் அல்லது டிஜிலாக்கர் மூலம் ஓட்டுநர் உரிமத்தை காட்டுதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இல்லையென்றால் ஓட்டுநர் உரிமம் ரத்தாகும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.