பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை கோவிலுக்கு சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு இன்று சென்னையில் இருந்து கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி இன்று 628 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது. நேற்று கிளாம்பாகத்தில் இருந்து 527 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து இன்று கிளாம்பாக்கத்தில் இருந்து 628 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு பேருந்துகள் மாதவரத்தில் இருந்தும் இயக்கப்படுகிறது. இன்று திருவண்ணாமலைக்கு கூடுதலாக 30 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. மேலும் திருவண்ணாமலைக்கு செல்பவர்கள் www.tnstc.in என்ற இணையதளம் மூலமாகவும் செயலி மூலமாகவும் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.